இந்தப் படத்தில் இருப்பது தான் நீர்மின்நிலையம் ஆகும். சரி இனி இதைப் பற்றிப் பார்ப்போம் படத்தில் உள்ளது போல ஒரு பெரிய அருவிக்கு அருகில் இந்த நிலையத்தை நிறுவி மின்னாற்றல் பெறப்படுகிறது.
இதில் உள்ள டாம் ஆனது நீரை சேமிக்கப் பயன்படுகிறது.
ரிசர்வாயர் ஆனது நீரின் அளவை நிர்ணயம் செய்கிறது.
இந்த ரிசர்வயரில் இருந்து அதிக அழுத்தத்துடன் நீரானது பென்ச்டோக் என்ற அமைப்பின் வழியாக செல்கிறது.
இந்த அதிக அழுத்தத்தை பொடென்ஷியல் எனெர்ஜி என்று கூருவார்கள் இந்த எனெர்ஜியானது பென்ச்டோக் அமைப்பில் ஹைனடிக் எனேர்ஜியாக மாறி டர்பைனை அடைகிறது.
இதில் டர்பைன் என்பது நம் வீடுகளில் இருக்கும் டேபிள் பேனில் உள்ள சிறகுகளை போன்ற அமைப்புடையது இது மின்னாக்கி என்று சொள்ளக்குடிய ஜெநேரட்டோர் என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த மினாக்கியானது மெக்கானிக்கல் எனெர்ஜியை மின்னாற்றலாக மாற்றக்குடிய அமைப்பு ஆகும்.
நீரானது ரிசர்வயரில் இருந்து பென்ச்டோக் வழியாக வேகமாக வந்து மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட டர்பைனில் உள்ள ப்ளேட்டில் படும்போது டர்பைன் ஆனது அதிகவேகத்துடன் சுற்றுகிறது உடனே மினாகிக்கு ஒரு மெக்கானிக்கல் எனெர்ஜி கிடைக்கிறது பிறகு இந்தமின்னாக்கி மின்னாற்றலை வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில் இந்த நீர்மின் நிலையத்தில் நான்கு விதமான பரிமாற்றங்கள் நடைபெறுகிறது
௧] போட்டேன்ஷிடல் எனெர்ஜி ஹனைட்டிக் எனேர்ஜியாக மாறுகிறது.
௨] மெக்கானிக்கல் எனெர்ஜி எலெக்ட்ரிகல் எனெர்ஜி என்று சொல்லகுடிய மின்னாற்றலாக மாறுகிறது.
இவ்வளவு செயல்களுக்குப் பிறகு கிடைக்கும் மின்னாற்றளைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆகவே நண்பர்களே நீரைப்போல் மின்னாற்றலை நாம் சேமித்து வைக்கமுடியாது அதனால் நாம் தேவைகேற்றபடி மட்டும் பயன்படுத்தி அனைவருக்கும் மின்னாற்றல் கிடைக்க செய்யவோம்.
மேலும் இந்த அமைப்பில் ட்ரான்ஸ்பார்மர் என்ற அமைப்பானது மின்னாகியில் இருந்து கிடைக்கும் மின்னாற்றலை கூடவோ அல்லது குறைத்தோ கொடுக்கும். மொத்தத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய ஏசி சப்பளை என்கிற மறுதிசை மின்னோட்டம் நம்மை வந்தடைகிறது.
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்............