மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

[1]என் சிந்தனைக்கு எட்டிய வயரிங் பற்றிய தகவல்:


பெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது.

அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க் செய்யும் முறையில் நான் சொல்வதையும் சேர்த்தால் வேலை நன்றாக இருக்கும். 

அதாவது வீட்டு  சுவரின் உள்ளாகவோ அல்லது சுவரின் வெளியாகவோ தான் நாம் வயரின் செய்வோம். 

பிறகு ஏதாவது சிறிய தவறு ஏற்பட்டால் அதாவது வயர்கநேக்சனில் பழுது ஏற்பட்டால் அதை கண்டுபிடிப்பது என்பது ஓரளவிற்கு கடினமான விஷயம்.


அதுவும் சுவரின்  உள்புறம் என்றால்  சொல்லவேடியதில்லை ஆகவே நாம் வயரிங் செயும் போது குறிப்பிட்ட அளவிற்கு இடையில் நாம் ஒரு சிறிய மின்தடை [resistor ] ஒன்றை பயன்படுத்தி ஒரு LED ஒன்றை சேர்ப்பது நல்லது.

ஏதாவது possitive வயரிலோ அல்லது negative வயரிலோ பழுது ஏற்பட்டால் உடனே LED எரியாது. அந்த இடத்தில் தான் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம்.


இதில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய மின்தடையின் அளவு = 220 kohm
மற்றும் இதனுடன் நீங்கள் இதற்க்கு இணையாக மின் சேமிப்பானை [capacitor ] இணைக்க வேண்டும் . இதன் அளவு = 440 micro farad .
நம்முடைய வீட்டு மின்னழுத்தம் அனைவருக்கும் தெரிந்ததே சிங்கள் பேஷ் என்றால் 230v த்ரீ பேஷ் என்றால் 440v  .

மீண்டும் அடுத்த பதிப்பில் சந்த்திப்போம் நண்பர்களே............

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.