மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

4] எப்படி நம் வீட்டிற்கு 3பேஸ், சிங்கில்பேஸ் supply வருகின்ரது.( பாகம்-2)




பொதுவாக நம் ஊர்களுக்கு அருகாமையில் அல்லது நம் ஊர் எல்லையில் இருக்கும் transformer-கள் தான் distribution transformer ஆகும். இதற்கு sub-station-ல் இருந்து மூன்று வயர்கள் எடுக்கப்பட்டு இந்த distribution transformer-ன் input-டாக கொடுக்கப்பட்டு output-ல் 4வயர்கள் எடுக்கப்படும்.

Distribution transformer-ல் connection-கள் இரண்டு முரையாக பிரிக்கப்பட்டுள்ளது. அது delta மற்றும் star ஆகும்.

Sub-station-ல் இருந்து வரக்கூடிய மூன்று வயர்கள் distribution transformer-ல் உள்ள delta-வில் இனைக்கப்பட்டு அடுத்து star connection-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த transformer-லேயே earth ஆனது இணைக்கப்பட்டு விடும். இதை சேர்த்துதான் distribution transformer-ன் output-ல் நான்கு வயர்கள் எடுக்கப்படுகின்றன.

இந்த 4வயர்களுக்கு நிறங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

அவைகள் red, yellow, blue, block இந்த block-ஆனது neutral ஆகும்.மீதமுல்ல மூன்று வயர்களும் பேஸ் வயர்கள் ஆகும்.

இந்த முறைகளில் இருந்து வரும் supply-ஜ தான் நம் வீடுகளில் பயன்படுத்துகிறோம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.