இன்றைக்கு பொறியியல் துறைகளிலே, மிகவும் முக்கியம் வாய்ந்தாது மின் இயலே, மின்சாரத்தை மனித சமுதாயத்தின் ஊழியன் என்று கூரினால் அது மிகையாகது. வாழ்க்கையை சகல வசதிகலுடனும், நிரைந்த இன்பத்துடனும் அனுபவிக்க மின் இயலின் உதவி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மிசாரத்தை ஆடம்பரப் பொருள் என்று ஒதுக்க இயலாத அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் நம்முடன் அது இரண்டரக் கலந்துவிட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிட, அந்நாட்டின் மின்சார வளர்ச்சியையே அளவுகோலாக உபயோகப்படுத்துகின்றனர். மின்சார வளர்ச்சி முதிர்வு பெற்ற நாடுகளில் அந்த மக்களின் வாழக்கைத்தரம், பொருளாதார நிலமை முதலியன நன்கு முன்னேற்றம் அடைந்திருக்கும்.
நவீன துழிற்சாலை ஒன்றினுல் நுழைவோமேயானால், சிரிய இழை விளக்கிலிருந்து, பல நூறு டன் எடைகளைத் தூக்கும் பாரம் தூக்கிகள்(crane) வரை மின்சாரத்தால் தான் இயங்குகின்றன.ஒரு தனி மனிதனின் அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவனது வீட்டில் தண்ணீர் சுடவைக்கும் இயந்திரத்திலிருந்து, பொழுதுபோக்க உபயோகப்படுத்தும் வானொலி, தொலைக்காச்சிப் பெட்டி வரையில் அவனுக்கு மின்சாரம் உதவுகிரது.
இது தவிர, கால்நடைத்துறை, விவசாயத் துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை, வானிலை முன் அறிவிப்பு ஆகியயாவிலும் முதன்மை தான்ங்கி நிற்கிறது.
இத்தகைய மின்சாரம் தற்பொழுது மூன்று முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது:
1) நீர் மின் ஆக்கம் (hydro electric system)
2) அனல் மின் ஆக்கம் (thermal electric system)
3) அணு மின் ஆக்கம் (atomic electric system)